News Image

தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா 2026

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் நடத்தும்
தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா — 2026

ஆண்டவர் யேசு விண்ணகம் செல்வதற்கு முன் தன்னுடைய சீடர்களுக்கு உங்களுக்கு ஒரு துணையாளரை அனுப்புவேன் என்று வாக்களித்தபடி சீடர்கள் வீட்டில் கூடியிருந்தபோது பெரும் காற்றும் இரைச்சலோடும் நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்ததை சீடர்கள் கண்டார்கள்.

அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். அதே பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிஷேகத்தை பெறுவதற்காக 23-05-2026 அன்று முழு இரவு ஆராதனைப்பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆராதனையில் கலந்து கொண்டு, தூய ஆவியின் அருட்பொழிவை நம் வாழ்வில் கண்டுணர கலந்து கொள்ளுமாறு அன்புடன் உங்களையும் அழைக்கின்றோம்.
இடம் :
St. Bonifatius Halle, Moltkestr. 160, 45138 Essen

காலம் :
23-05-2026 சனிக்கிழமை
நேரம் :
19:00 – 06:30 (ஐரோப்பிய நேரம்)

வழிநடத்துபவர்:
அருட்தந்தை நிருபன் தார்சீசியஸ் அடிகளார்

முந்தைய அடுத்தது