நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இணைந்து செபிப்போம்

முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 17வது வாரம் செவ்வாய்க்கிழமை
2021-07-27ஆண்டவர் இயேசுவே,
ஞானத்தின் உறைவிடமே! உம்மைப் போற்றுகின்றேன். நீதியின கண்ணாடியே! உம்மைத் துதிக்கின்றேன். உமது செயல்கள் எல்லாம் நீதியானவை. உமது திருவுளங்கள் எல்லாம் நன்மை தருகின்றது. அதற்காய் உக்கு நன்றி கூறுகின்றேன். “ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார்” என்று, இன்றைய இறைவார்த்தையில் வாசிக்கின்றேன். இயேசுவே! உமது முகத்தின் ஒளி என்னைப் புதுப்பிக்குமாறு செய்யும். நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளிவீசுவர்” என்றவரே! நேர்மையானவற்றைச் செய்து இறைவனுக்கு ஏற்புடையவனாக மாற அருள் தாரும். இயேசுவே! நீர் தரும் அறிவுரைக்கும், குரலுக்கும்; காது இருந்தும் செவிசாய்க்காமல் மனிதனாக இருக்கும் என் காதுகளை; உம் குரலுலையும், உம் அறிவுரையையும் கேட்கும் படி திறந்தருளும். இயேசையா! உமக்கு விருப்பம் இல்லாத பல தீய முற்புதர்களும், களைகளும் என்னில் விளைந்து கிடக்கின்றன. அவை அனைத்தையும் உமது பிரகாசத்தின் ஒளியால் சுட்டெரித்தருரும். இரக்கமும், பரிவும் உள்ள இறைவா! சினம் கொள்ளத் தாமதிக்கும் என் நேச அன்பரே! என் பாவங்களை எல்லாம் உமது இரக்கத்தால் மன்னியும்; உமக்கு அஞ்சி வாழும் பிள்ளையாக; தேவ பயம், தேவபக்தியுடன் வாழும் பிள்ளையாக என்னை மாற்றும். ஆண்டவரே இயேசுவே! "ஞானம்; இருளான பாதையில் நடப்போரின் கையில் இருந்து உன்னைத் தப்புவிக்கும்" என, உமது வார்த்தையில் வாசிக்கும் நான்; ஞானத்துடன் வாழவும், இந்த நாளில் பொல்லாத சூழ்ச்சியான உலகில் நின்று என்னை உமது வல்லமையான கரத்தால் காத்து வழிநடத்த வேண்டும் என்றும், இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்

உணவு அமைப்புகள் உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தையின் செய்திகோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், நாம் சந்தித்துவரும் மிகப்பெரும் சவால்களில், பட்டினி, உணவு பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவையும் அடங்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா. நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ஒரு பன்னாட்டுக் கூட்டத்திற்கு... [2021-07-27 01:08:50]இளையோருக்கும் முதியோருக்கும் இடையே உடன்படிக்கைதிருஅவையில் முதல்முறையாகச் சிறப்பிக்கப்படும், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும் முதியோர் நாளையொட்டி, புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில், வாழ்வைப் பகிர்வதில், இளையோருக்கும் முதியோருக்கும் இடையே நிலவவேண்டிய உடன்படிக்கையைக் குறித்து திருத்தந்தை எழுதியிருந்த மறையுரை வாசிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவமனையிலிருந்து... [2021-07-27 01:05:33]வயதுமுதிர்ந்தோருடன் திருஅவை நெருக்கமாக உள்ளதுதாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், வயதுமுதிர்ந்தோர் முதல் உலக நாளுக்கென்று, மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, கொல்கத்தா உயர்மறைமாவட்ட பேராயர் தாமஸ் டி’சூசா அவர்கள், ஒவ்வொரு பங்குத்தளமும், தன் பகுதியிலுள்ள வயதுமுதிர்ந்தோர் மீது அக்கறை காட்டுவதற்கு, இந்த உலக நாள்... [2021-07-25 01:13:23]

யர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காகமறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயரின் பூதவுடல் இன்று மாலை மூன்று மணியளவில் ஊர்வலமாக செபஸ்தியார் போராலயத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.

ஆயர்... [2021-04-05 00:03:12]மன்னாரில் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு பெருமளவு மக்கள் அஞ்சலி!மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டகையின் பூதவுடல், இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக... [2021-04-03 12:45:21]

மறைந்த ஸ்டான் சுவாமி பணிகளுக்கு நீதிபதிகள் புகழாரம்இம்மாதம் 5ம் தேதி, மும்பையில் தடுப்புக்காவலில் இறைவனடி சேர்ந்த, இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் ஆற்றியுள்ள பணிகளை, மும்பை உயர் நீதிமன்றம், அதிகம் பாராட்டியுள்ளதோடு, அப்பணிகளுக்கு, தனது மிகப்பெரும் மரியாதையையும் செலுத்தியுள்ளது. கடுமையான நோய்களால் தாக்கப்பட்டிருந்த 84 வயது... [2021-07-22 00:28:56]இந்திய இயேசு சபையினர் முன்னெடுக்கும் 'தேசிய நீதி நாள்'இந்தியாவில் மனித உரிமைகளையும், நீதியையும் நிலைநாட்ட உழைத்துவரும் பல்வேறு அமைப்புக்களுடனும், நல்மனம் கொண்டோருடனும் இணைந்து, இந்திய இயேசு சபை துறவியர், 'தேசிய நீதி நாள்' என்ற பெயரில், ஜூலை 28, வருகிற புதனன்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக, இந்திய... [2021-07-22 00:18:24]

சந்திப்பின் காலம் - தவக்காலம்இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAGஎது திருவருகைக்கால பரிசுதிருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]

எழுத்துருவாக்கம்:

The Miracle of Unity has Begun


2021-07-27

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

Saint Joseph of Cupertino


2021-07-27

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2021-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! செபிக்காத அனைவருக்காகவும் செபிக்குமாறு உங்களை நான் அழைக்கிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியால் சாட்சிகளாகத் திகழுங்கள், எனது பிள்ளைகளாக இருங்கள், இறைவன் உங்கள் செபங்களைக் கேட்டு உங்களுக்கு அமைதியைத் தரட்டும், இந்த அமைதியற்ற உலகில் அரவணைப்பும் ஆதரவும் வழங்கட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, மற்றவர்களுக்கு வாரி வழங்குங்கள், எனது அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இதன்மூலம் பிறர் நீங்கள் எனக்குச் சொந்தமானவர்கள் என்பதை உணர்ந்து கொள்வதுடன்,...
2021-05-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களைப் பார்த்து அழைக்கிறேன், இறைவனிடம் திரும்பி வாருங்கள், ஏனென்றால் அவரே அன்பானவர் அத்துடன் அவரது அன்பின் நிமித்தம், மனம்திரும்பும் வழியில் உங்களை நடத்திச்செல்ல என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார். பாவத்தையும் தீயவற்றையும் விட்டுவிட்டு, தூயவற்றிற்காக உங்களை ஒப்படைத்தால் மகிழ்ச்சி உண்டாகும். மறைந்துபோகும் இவ்வுலகில் உங்களை எனது நீட்டிய கைகளுக்குள்ளே வைத்திருக்கிறேன். கடவுளின் அன்பை இதுவரை கண்டறியாதவர்களுக்காக செபிப்பதுடன் அவர்கள் குறித்து நம்பிக்கை கொள்ளுங்கள். எனது அழைப்பைக் கேட்பதற்காக...
2021-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்கள் நம்பிக்கையை வசந்தகாலத்தின் வர்ணங்களாகக் காட்டிக்கொள்ள இன்று உங்களை நான் அழைக்கிறேன். இது உங்கள் நம்பிக்கையில் உறுதியை மற்றும் உற்சாகத்தைத் தருவதாக அமையட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் நம்பிக்கையை அசைந்தாட அத்துடன் இந்த வேளையில் பரீட்சித்துப்பார்க்க விடாதீர்கள். துணிவோடு கிறிஸ்துவுடன் செல்லுங்கள், அவரே வானத்தை நோக்கி உயிர்த்தவர், அவரே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். இந்தத் தூய வழியிலேயே நான் உங்களை வழிநடத்துவதுடன் உங்கள் அனைவரையும் எனது...


திருவெளிப்பாட்டு ஆண்டு 2018/2019

02/12/2018-01/12/2019


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)