ஒத்திவைக்கப்பட்டுள்ளது மெய்வல்லுனர் போட்டியும் கலாச்சாரவிழாவும் 2026
அன்பார்ந்த பணியக மக்களுக்கும், மற்றும் விளையாட்டு விழாவில் பங்கேற்க்கும் அனைவருக்கும்,
எமது ஆன்மீகப் பணியகத்தின் ஏற்பாட்டில் 27.06.2026 அன்று நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டி, தற்போது நிலவும் அசாதாரண வெப்பநிலை மற்றும் காலநிலைச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைவரின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக வீரர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் உடல்நலனில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போட்டி மீண்டும் நடைபெறும் புதிய திகதி மற்றும் மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் இந்த விபரங்களை பங்கேற்கும் அனைவருக்கும் அறியாத் தருமாறு கேட்டு நிற்கிறோம்.
இந்நிலையில் தங்களின் புரிந்துணர்வு, ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.