துயர் பகிர்வு
திரு. திருச்செல்வம் அருளப்பு
(Düren)
21.12.1937 – 18.05.2026
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் மூத்த ஆரம்பகால பணியாளரும், டியூரன் (Düren) பணித்தள பங்குமகனுமான திரு. திருச்செல்வம் அருளப்பு அவர்கள் 18.05.2026 திங்கட்கிழமை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகிறோம்.
இவர் பணியகத்தின் பல பணிகளில் தன்னை இணைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். குறிப்பாக, அன்னார் எமது ஆன்மீகப் பணியகத்தின் ஆரம்பகால செயற்பாட்டாளராகவும்:
• 25 ஆண்டுகள் Düren பங்கின் தொடர்பாளராகவும்
• 13 ஆண்டுகள் தொடுவானம் பத்திரிக்கையின் துணை ஆசிரியர்களில் ஒருவராகவும்
• மேலும் எமது பணியகத்தின் உயரிய விருதான “சூரிய வெள்ளிகள்” விருதைப் பெற்றவராகவும் விளங்கியவர்
இவரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, திரு. திருச்செல்வம் அருளப்பு அவர்களின் ஆன்மா இறை சந்நிதியில் நித்திய அமைதியுடன் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறோம்.
பார்வைக்கு
Friedhof Marienstraße
Marienstraße
52457 Aldenhoven
சனி, 23.05.2026 — காலை 8:00 – 9:30
இறுதி திருப்பலி
St. Martin Kirche
Kapellenplatz
52457 Aldenhoven
சனி, 23.05.2026 — காலை 10:00
அஞ்சலி ஒன்றுகூடல்
அடக்கம் நிகழ்ச்சிக்குப் பின்னர், நினைவுகளைப் பகிர்ந்து, ஆறுதல் மற்றும் ஆதரவுடன் மதிய உணவிற்கு எங்களுடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஆழ்ந்த துயரில்
அன்பு மனைவி
ரஞ்சினி திருச்செல்வம்
அன்பு பிள்ளைகள்
திருமாவளவன் (Joseph)
திருமகள் (Lourdes)
ரஞ்சிலா (Lourdes)
திருவேணி (Christiana)
திருவேந்தன் (Christian) மற்றும் குடும்பத்தினர்
தொடர்புக்கு
Joseph — 0049 176 45218190
Christian — 0049 160 7714710
"ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார், அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்." (திருப்பாடல்கள் 34:22)