Banner Image
புனிதர் தகவல் - புனித மதர் தியோடர் குரீன், சபைத் தலைவர் St. Mother Theodore Guerin

03-10-2026 - புனித மதர் தியோடர் குரீன், சபைத் தலைவர் St. Mother Theodore Guerin

🕊️ பிறப்பு: 1798, - பிரான்ஸ்
Saint Image
✝️ இறப்பு: 14 மே 1856, - அமெரிக்கா

அவரைப் பற்றி

இவர் புனித மேரி ஆஃப் வூட்ஸ் Saint Mary of Woods என்ற சபையை நிறுவினார். இவர் நல்லொழுக்கத்தால், மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார். நம்பிக்கையின் மறு உருவமாக திகழ்ந்தார். இவர் தனது செப வாழ்வினால் மிகவும் வலிமைப் பெற்று வாழ்ந்தார். தனது எளிமையான வாழ்வால், இவ்வுலக துன்பங்களை எதிர்த்தார். ஏராளமான துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். அமைதியின் சிகரமாய் இருந்தார்.

இவர் 1825 ஆம் ஆண்டு, செப்டம்பர் 8 ஆம் நாள் துறவியானார். 1840-1856 ஆம் ஆண்டு வரை புனித வூட்ஸ் மேரி Sisters of Providence of Saint Mary of the Woods என்ற சபையை நிறுவி, அச்சபையின் தலைவியாக பொறுப்பேற்றார். சபையை நிறுவி, பொறுப்பேற்ற நாளிலிருந்து, தன்னை இறைவனிடம் கையளித்து, இறைவன் மட்டுமே சபையை வழிநடத்த வேண்டுமென்று இடைவிடாமல் செபித்தார். இறைவனின் வழிநடத்துதலாலும், பராமரிப்பினாலும் பல வழிகளில், பலமுறை வெற்றியும் கண்டார்.

செபம்

நல்ல ஆயனாம் இறைவா! உம் மந்தையின் ஆடுகளை வழிநடத்த புனித மதர் தியோடர் குரீன் வழியாக நல்ல ஆயர்களை தந்தீர். புதிய சபை உருவாக்கியதன் வழியாக, மேலும் உம் பணியை வளர்ச்சியடைய செய்தார். இன்றும் இவ்வுலகில் புதிதாக தொடங்குகின்ற துறவற சபைகளை நீர் ஆசீர்வதித்து தொடர்ந்து பராமரித்து வழிநடத்தியருளும்படியாக ஆயனே உம்மை மன்றாடுகின்றோம்.

Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media