அருளின் விநாடிகள் - 2026-10-03
Downloadஇன்றைய இறைவாக்குத் துகள் – 2026-10-03
இன்றைய சிறிய வழிச் செபம் – சேவை
வாழ்வையை சேவைக்காக அர்ப்பணித்த இறைவா, இன்று சேவை செய்ய நல்மனம் தர வேண்டுகிறேன் ஆமென்
இன்றைய துதி – 2026-10-03
இணைந்து செபிப்போம் – 2026-10-03
ஆண்டவரே இயேசுவே,
என்னை நெருக்கடி வேளையில் காப்பவரே! ஆராதனை செய்கின்றேன். உடன்படிக்கையில் என்றும் மாறாத இறைவனே! உம்மை துதிக்கின்றேன். இருளான பாதையில் ஒளியாய் வந்தவரே! நன்றி கூறுகின்றேன். இயேசுவே! எழுபத்துரெண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன”என்ற போது; “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்” என்று, மனிதரின் பெருமைகளில் நாட்டம் கொள்ளாமல் வாழ நீர் இன்றைய இறைவார்த்தையில் கற்று தருகின்றீரே! நன்றி கூறுகின்றேன். நான் உம்மில் மகிழ்கின்றேன்; உமது வார்த்தையிலும், நியமங்களிலும் மகிழ்கின்றேன்; அதை விட விண்ணகத்தில் என் பெயர் எழுதப்பட்டுள்ளது என்பதை குறித்த பொருமையும் களிப்பும் கொள்ள எனக்கு கிருபை தாரும். இயேசுவே! எந்த வேளையிலும் சாத்தானுக்கு அடிமையாகி போகா வண்ணம் என் சிந்தனை ,சொல், செயல்கள் அமைதிட தூய ஆவியானவரின் வழி நடத்தலை எனக்கும், என்னை சூழ உள்ளவர்களுக்கும் தந்தருளும். பாவியான என்னையும் உமது திட்டங்களையும், திருவுளங்களையும் உணரச்செய்த தயவிற்காய் நன்றி கூறுகின்றேன். ஆண்டவரே இயேசுவே! என் வாழ்நாட்களில் உம்மை மட்டும் பெருமைப்படுத்தவும், உமது திருச்சிலுவையை குறித்து பெருமை பாராட்டவும், உமது திருவுளங்களை அறிந்தி செயற்படவும், என்னை தாழ்த்தி உமது நாமம் உயர்த்திட அருள்தாரும். இன்றைய நாளில் என்னை தூய ஆவியின் அபிஷேகம் பொழிந்து உமது ஒளி நிறைந்த பாதையில் நடந்திடவும் வேண்டும் என்று இயேசுவின் பரிசுத்த நாமத்தால் செபிக்கின்றேன். ஆமென்