News

14வது ஆண்டில் மரியன்னையின் பிறப்பு பெருவிழா 2026

டோட்முண்ட், விற்றன், கஸ்ரொப்-ரொக்ஸ்சல் மற்றும் கேர்ன ஆகிய பணித்தளங்கள் இணைந்து, கஸ்ரொப்-ரொக்ஸ்சலில் மரியன்னையின் பிறப்பு பெருவிழாவை சிறப்பாகக் கொண்டாட உள்ளனர்.

வெள்ளிக்கிழமை – 11.09.2026
மாலை 19.00 மணிக்கு
நற்கருணை வழிபாடும், தொடர்ந்து நற்கருணைப் பவனியும் நடைபெறும்.

சனிக்கிழமை – 12.09.2026
காலை 10.30 மணிக்கு செபமாலையுடன் விழா ஆரம்பமாகி, அதனைத் தொடர்ந்து
திருவிழாத் திருப்பலியும், மரியன்னையின் திருச்சுரூபப் பவனியும் நடைபெறும்.
இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு, அன்னை மரியாளின் அருளையும் ஆசீரையும் பெற்றுச் செல்லுமாறு,
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் – யேர்மன் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

ஆலய முகவரி
Herz-Jesu-Kirche
Schulstr. 10
44579 Castrop-Rauxel

முந்தைய