நமது பணியகத்தின் மூத்த பணியாளர் திரு. தம்பிபிள்ளை இராஜ குலநாதன் (ராஜன் )அவர்கள் காலமானார்
உடுவில் சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் தற்போது, யேர்மன் - பீலவெல்ட் இடத்தை 1992 முதல் வாழிடமாகவும் கொண்ட, எமது யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகத்தின் பீலவெல்ட் பணித்தள பங்குமகன் சுகயீனம் காரணமாக (29.04.2026.புதன்கிழமை) இயற்கை எய்து விட்டார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகிறோம்.
திரு. தம்பிபிள்ளை இராஜகுலநாதன் (ராஜன் ) அவர்கள் பணியகத்தின்
பல பணிகளில் தன்னை இணைத்து பணியாற்றியவர். குறிப்பாக எமது பணியகத்தினால் நடாத்தப்பட்டு வரும் வானொலியில் திருச்சபைச் செய்திகள் வழங்கியதுடன், நற்செய்தி அறிவிப்புகளிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். இவர் பாடல் குழுவிலும், கேவலார் யாத்திரைப் பணிகளில் பணியாளராகச்சேவை செய்ததுடன், இயேசுவின் பாடுகள் நாடகத்திலும் அர்ப்பணிப்புடன் நடித்தவர். பீலவெல்ட் பங்கின் உதவித் தொடர்பாளராகவும் பணியாற்றியவர்.
தனது பங்கில் ஒலி–ஒளி–வீடியோ பணிகளில் அர்ப்பணிப்புடன் சேவை செய்ததுடன், நாடகங்கள், கிறிஸ்தவ இசை நிகழ்ச்சிகள், பங்குத் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றி, பங்கின் வளர்ச்சிக்கு மறக்க முடியாத பங்களிப்பைச் செய்தவர்.
இவரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர் அனைவருக்கும் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு திரு. தம்பிபிள்ளை இராஜகுலநாதன் (ராஜன் ) அவர்களின் ஆன்மா இறை சந்நிதியில் நித்தியத்திற்கும் நிறைவான அமைதியுடன் இறைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
"ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார், அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். "
(திருப்பாடல்கள் 34:22)
அன்னாரின் உடல் பார்வைக்கு:
சனிக்கிழமை 02.05.2026 மாலை 15:30 – 17:00
இடம்: Stieghorster Kapelle, Schneidemühler Straße 41, 33605 Bielefeld
இறுதி அஞ்சலி, திருப்பலி மற்றும் அடக்கம்:
வியாழக்கிழமை 07.05.2026
• 10:00 – 10:45 : இறுதி அஞ்சலி
• 11:00 – 12:00 : திருப்பலி மற்றும் அடக்கம்
அடக்கத்திற்குப் பின் நடைபெறும் உணவு விருந்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இடம்: Reichenbergerstraße 7, 33605 Bielefeld
தொடர்பு :
• Chandramohan (Kamal): +49 17623560588
• Maueran: +49 1609479463
• Raji: +49 1777093554