News

இளையோருக்கான விசேட நற்கருணை ஆராதனை 23.10.26

“ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
யாழினை மீட்டி இனிய குரலில்
அவரைப் போற்றிப் பாடுங்கள்.”

இம்மாதம் 23.10.2026, வெள்ளிக்கிழமை, மாலை 18.30 மணி முதல் இரவு 20.30 மணி வரை, இளையோருக்கான விசேட நற்கருணை ஆராதனை நடைபெற உள்ளது.

இடம்:
Herz Jesu Kirche
Hünefeldstraße 52
42285 Wuppertal

பணியக இயக்குனர் அருட்பணி. நிரூபன் அடிகளார் அவர்களின் வழிநடத்துதலின் கீழ் இவ்விசேட ஆராதனை நடைபெறும்.

இந்நிகழ்வில் இசைக்கருவிகளை மீட்டி, இனிய பாடல்களால் ஆண்டவரைப் போற்றித் துதித்து, ஒன்றிணைந்து செபிக்க இருக்கின்றோம்.

அன்பான பெற்றோர்களே,
உங்கள் பிள்ளைகளை இவ்விசேட ஆன்மிக நிகழ்வில் பங்கேற்க ஊக்குவித்து, அழைத்து வாருங்கள். இளையோர் அனைவரும் ஒன்றிணைந்து ஆண்டவரின் அன்பையும் அருளையும் அனுபவிக்கும் ஒரு சிறப்பான நேரமாக இது அமையட்டும்.

அனைத்து இளையோரையும் அன்புடன் அழைக்கின்றோம்!
வாருங்கள்… பாடுவோம், துதிப்போம், செபிப்போம்; ஆண்டவரோடு இணைவோம்!

முந்தைய