News Image

யூபிலி ஆண்டு நிறைவு

யேர்மன் ஆன்மீக பணியகமானது 02-02-1987இல் ஆரம்பிக்கப் பட்டு 02-02-2012இல் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அதனை முன்னிட்டு 13-08-2011இல் கொண்டாடப்பட்ட கேவலார் அன்னையின் திருவிழாவில் இருந்து 11-08-2012-இல் கொண்டாடப்பட்ட
திருவிழா வரையிலான காலப்பகுதியினை யேர்மன் ஆன்மீக பணியகமானது வெள்ளிவிழா(யூபிலி) ஆண்டாக பிரகடனப்படுத்தி இருந்தது.
இவ் யூபிலி ஆண்டின் ஆரம்ப பிரகடனம் சென்ற ஆண்டு கேவலார் அன்னையின் திருவிழாவில் பணியகத்தின் யூபிலி ஆண்டின் ஆரம்பம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இப்பிரகடனத்தை தாயகத்தில் இருந்து வருகை தந்த எமது பணியகத்தின் ஆரம்ப இயக்குனர் அருட்கலாநிதி. அ.பி யெயசேகரம் அவர்கள் வெளியிட்டார்.
அதன் யேர்மன் மொழிபெயர்ப்பினை அருட்பணி. அல்பேர்ட் கொலன் அவர்கள் வெளியிட்டார். வெள்ளிவிழா கொடியினை
அருட்கலாநிதி. அ.பி யெயசேகரம் அவர்கள் ஏற்றி வைத்தார்.

முந்தைய அடுத்தது