News Image

சிறப்புடன் நடைபெற்ற யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் இறைவார்த்தை பகிர்வும் குணமாக்கல் திருப்பலியும்

யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் 25வது யூபிலி ஆண்டினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட அருட்பணியாளர் போல் றொபின்சன் அவர்களின் இறைவார்த்தை பகிர்வும் குணமாக்கல் திருப்பலியும் யேர்மனி நாட்டின் பிரதான நகரங்களில் மிக சிறப்பாக நடைபெற்றன. இவ்வாண்டு யூலை மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெற்ற இவ் வழிபாடுகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இம் முறை இவ் வழிபாடுகள் முன்சன் (26.07.2012), நூறன்பேர்க் (27.07.2012), ஸ்டுட்காட் (28.07.2012), எசன் (29.07.2012) ஆகிய இடங்களில் நடைபெற்றன.

முந்தைய அடுத்தது