News

ஐப்பசி மாதம் - செபமாலை மாதம் - மாதாவின் வணக்கமாதம்



திருச்சபையின் தாயாம் அன்னை மரியாளை மகிமைப்படுத்தும் மாதங்களில் ஐப்பசியும் உள்ளடங்குகிறது. செபமாலை மாதா செபிக்கின்ற மாதா என்றே அழைக்கப்படுகின்றார். நமக்காக நம் ஆண்டவரும் அவரது திருக்குமாரனுமான இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடுபவராக பரிந்து பேசபவராக மாதா திகழ்கின்றார்.

இறை விருப்பத்தை நிறைவேற்றுவதில் முதன்மையாகத் திகழும் மரியன்னை நாம் அதனை நிறைவேற்றுவதற்குத் தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் உள்ளார்.


இவ்மாதத்தில் பங்குகளிலும் பணித்தளங்களிலும் மக்கள் குடும்பங்களாக சேர்ந்து செபமாலை சொல்வது வழக்கம். உங்களையும் இவ்மாதத்தில் குழுமங்களாக செபமாலை
செபிக்க, ஆண்டவரின் நற்செய்தியை தியானிக்க அன்புடன் அழைக்கின்றோம். செபமாலையின் நான்கு மறையுண்மைகளையும் உங்கள் பயன்பாட்டுக்காக சுருக்கமாக தொகுத்துள்ளோம். தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.

முந்தைய அடுத்தது