கண்ணீர் அஞ்சலி :: திரு.ஞானப்பிரகாசம் அல்பேட் (நியுரன்பேர்க் பணித்தளத்தின் முன்னை நாள் தொடர்பாளர்)
யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் பணித்தளங்களில் ஒன்றாகிய நியுரன்பேர்க் பணித்தளத்தின் முன்னாள் தொடர்பாளர் திரு ஞானப்பிரகாசம் அல்பேட் (றூபன்) அல்பேட் அவர்கள் 22-01-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவர் 1989ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டு வரை நியுரன்பேர்க் பணித்தளத்தின் தொடர்பாளராக பணியாற்றி, பணித்தளத்தினதும் பணியகத்தினதும் வளர்ச்சிக்கு பெருதும் உதவினார். இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் இவருடைய அன்பு மனைவி மேரி அலிஸ் கிறேசன்சியா(சந்திரகலா) பிள்ளைகள் ஓக்க்ஷிலியா, அலன், அனுசியா மற்றும் இவருடைய உறவினர் நண்பர்களுக்கும் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் தனது ஆழ்ந்த மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றது. இவருடைய ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்.