புதுப்பித்தல் ஆண்டின் இறைத்தியான வழிபாடுகள் -2020
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் 2020 ஆண்டினை புதுப்பித்தல் ஆண்டாக பிரகடனப்படுத்தி இருக்கின்றது. இதனை முன்னிட்டு நமது பணியகம் புதுப்பித்தல் வழிபாடுகளை ஏற்பாடு செய்துள்ளது. எல்லா மக்களும் பயன் பெறும் விதமாக 42 பணித்தளங்களும் 18 வலயங்களாக பிரிக்கப்பட்டு இந்த வழிபாடுகள் இடம் பெற உள்ளது. இந்த வழிபாடுகள் எல்லா பணித்தளங்களிலும் 10:30 முதல் 17:30 வரை இடம்பெறும். எனவே இந்த வழிபாடுகளில் தவறாமல் கலந்து கொண்டு ஆண்டவர் இயேசுவில் வளர அழைக்கின்றோம். இந்த வழிபாடுகளுக்கு வருகைதரும் போது வேதாகமத்தை எடுத்து வரவும்.