News Image

2019-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது அன்பான மகன் எப்பொழுதும் செபித்ததுடன் வானகத்தந்தையிடம் ஆசீர் பெற்றார். அவர் எப்பொழுதும் அனைத்தையும் தந்தைக்குக் கூறியதுடன் அவரின் சித்தத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். இதுபோன்றே நீங்கள் நடந்து கொள்ளவேண்டும். அன்பான பிள்ளைகளே, வானகத்தந்தை எப்பொழுதும் தனது பிள்ளைகளின் வேண்டுதலைக் கேட்டுக்கொள்வார். வானகத்தந்தை தனது மனித வடிவத்தைப் பரிசாகத் தந்துள்ளார் அது எனது மகனின் வடிவமாகும். எனது அன்பின் தூதர்களே, நீங்கள் எப்பொழுதும் எனது மகனின் வடிவத்தை உங்கள் இதயத்தில் தாங்க வேண்டும். நீங்கள் எப்பொழுதும் அவரது அன்பையும் அவரது தியாகத்தையும் நினைவிற்கொள்ள வேண்டும். எனது அன்பின் தூதர்களே எனது மகனை அறியாதவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களும் எனது மகனின் அன்பைக் கண்டறியச் செய்யுங்கள். எனது பிள்ளைகளே, திருவிவிலியத்தை வாசியுங்கள். அதில் எப்பொழுதும் புதிதான ஒன்றைக் காண்பதுடன், அதுவே உங்களை எனது மகனுடன் இணைக்கின்றது. எனது அன்பான தூதர்களே எனது மகனின் அன்பையும் சமாதானத்தையும் உங்கள் சசோதர சகோதரிகளுக்கு வழங்குங்கள். எவரையும் தீர்ப்பிடாதீர்கள். அனைவரோடும் எனது மகனை அன்புசெய்வது போன்று நடந்து கொள்ளுங்கள். இவ்வாறான வழியிலேயே நீங்கள உங்கள் ஆன்மாவைப் பாதுகாக்க முடியும், அதுவே உங்களிடம் உள்ள அனைத்துப் பொருட்களிலும் பெறுமதி மிக்கது. நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.„

முந்தைய அடுத்தது