2019-11-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
“அன்பான பிள்ளைகளே! இந்த நேரம் உங்களுக்கு ஒரு செபிக்கும் நேரமாக அமையட்டும். இறைவன் இல்லாமல் உங்களுக்கு அமைதி இருக்காது. ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, உங்கள் இதயத்தில் அமைதிக்காக மற்றும் குடும்பங்களுக்காகச் செபியுங்கள், இதனால் இயேசு உங்களில் பிறப்பதுடன் அவரது அன்பையும் ஆசீரையும் வழங்குவார். உலகம் போரை விரும்புகிறது ஏனென்றால் அதன் இதயம் முழுவதும் வெறுப்பும் பொறாமையும் நிரம்பியுள்ளது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் கண்களில் திருப்தியின்மை தெரிகின்றது ஏனென்றால் உங்கள் வாழ்வில் இயேசு பிறக்க நீங்கள் அனுமதிக்கவில்லை. அவரைத் தேடுங்கள், செபியுங்கள், அவர் தன்னை உங்களுக்கு குழந்தையாகத் தருவதுடன் அக் குழந்தையே மகிழ்வையும் அமைதியையும் தரும். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காகச் செபிக்கிறேன். நீங்கள் என் அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன்.”