2020-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில், உங்கள் முகங்கள் செபத்திற்காக மாற்றமடைவதைக் காண நான் விரும்புகின்றேன். நீங்கள் உலக மாயைகளில் மூழ்கித் தவிப்பதுடன் விரைவில் இளவேனிற்காலம் வரவுள்ளது என்பதையும் உணராதுள்ளீர்கள். எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் ஒறுத்தல் செய்யவும் செபிக்கவும் அழைக்கப்படுகின்றீர்கள். எவ்வாறு இயற்கை அமைதியுடன் புது வாழ்விற்காகப் போராடுகின்றதோ, அதேபோன்று நீங்களும் இறைவனிடம் செபிக்க உங்கள் மனதைத் திறவுங்கள், அவரிடமே நீங்கள் சமாதானத்தையும் உங்கள் இதயத்தில் இளவேனில் சூரிய வெப்பத்தையும் கண்டுகொள்ளலாம். எனது அழைப்பைக் கேட்பதற்காக நான் நன்றி கூறுகின்றேன்.„