2020-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! உங்கள் தூய்மையான மற்றும் நிலையான அன்பு அன்னையான எனது இதயத்தை கவர்ந்துள்ளது. வானகத் தந்தையின் மீதுள்ள உங்கள் விசுவாசம் மற்றும் நம்பிக்கை நறுமணம் வீசும் றோசாக்களாகும். அவைகளை நீங்கள் எடுத்துவரும்போது, அவை அழகான றோசா மலர்க்கொத்தாகின்றது, இவை உங்கள் செபங்கள், இரக்கச் செயல்கள் மற்றும் அன்பாக ஒன்றுசேர்ந்துள்ளது, இவைகளின் ஊடாக நீங்கள் வானகத் தந்தையை மகிமைப்படுத்துகின்றீர்கள். எனது அன்பான தூதர்களே, இது அவதானமாக இருப்பதற்கான காலம் என்பதுடன் நான் உங்களை அன்பாகக் கேட்டுக்கொள்வது, நீங்கள் யாரையும் தீர்ப்பிடாதீர்கள், ஏனென்றால் வானகத் தந்தையே ஒவ்வொருவரையும் தீர்ப்பிடுவார். நீங்கள் ஒருவர் ஒருவருடன் அன்பாக இருக்குமாறு கேட்பதுடன், அதுவே என்றும் நிலைத்திருக்கும். அதுவே என்றும் இறைவனுக்குச் சாட்சிபகரும். எனது மகனின் ஒளியைக் கொண்டுவருவதுடன் இருளை அகற்றுங்கள், அது உங்களை அதிகமாகப் பற்றிக்கொள்ள விரும்புகிறது. நீங்கள் பயம்கொள்ளாதீர்கள். எனது மகனின் இரக்கம் மற்றும் அன்பு ஊடாக நான் உங்களுடன் உள்ளேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்“.