News Image

2020-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! இந்த நாட்கள் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் மனம்திரும்பலுக்கான காலமாக அமையட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, தூய ஆவியானவர், தனிமையிலுள்ள உங்களுக்கு, பலத்தையும் இறை நம்பிக்கையையும் வழங்கி உறுதிப்படுத்துவாராக, அத்துடன் இறைவன் என்னை உங்களிடம் அனுப்புவதன் ஊடாக நீங்கள் உண்மை அன்புக்குச் சாட்சிகளாத் திகழ்வீர்களாக. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, சோதனைகளுக்கு உட்பட்டு உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் அத்துடன் உங்கள் செபங்களும் ஒரு பாலைவனத்தைப் போன்று பரந்ததாக இருக்கட்டும். இறைவன் அன்பைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பதுடன், உங்கள் வாழ்வு உயிர்த்த கிறிஸ்துக்கு சாட்சியமாக இருக்கட்டும். நான் உங்களுடன் இருப்பதுடன் நான் உங்கள் அனைவரையும் அன்னைக்குரிய பரிவுடன் அன்பு செய்கின்றேன். எனது அழைப்பைக் கேட்பதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்“

முந்தைய அடுத்தது