2020-02-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
அன்பான பிள்ளைகளே! இறைவன் தனது முடிவை செயற்படுத்தியது மற்றும் அவரது அன்பு காரணமாக, நான் இறைவனதும் உங்களதும் தாயாகத் தெரிந்தெடுக்கப்பட்டேன். அத்துடன் வானகத் தந்தை மீதான எனது விருப்பம் மற்றும் அளவிடமுடியாத அன்பு மற்றும் அவரில் கொண்ட எனது முழு நம்பிக்கை, எனது உதரத்தை இறைமைந்தரின் பாத்திரம் ஆக்கியது. நான் உண்மைக்காக, அன்புக்காக மற்றும் மீட்பிற்காகப் பணிசெய்தேன், இப்போது நான் உங்கள் மத்தியில் வந்து அனைவரையும் அழைக்கிறேன், எனது பிள்ளைகளே, எனது அன்பின் தூதர்களே, உண்மையை தாங்கிச்செல்பவர்களாக இருங்கள், அவரது வார்த்தைகளை -மீட்பின் வார்த்தைகளை- எனது மகனில் விருப்பத்துடனும், அன்புடனும் பரவச் செய்யுங்கள், இவ்வாறான உங்கள் நடவடிக்கைகள் மூலம் எனது மகனை அறியாத அனைவருக்கும் அவரது அன்பை நீங்கள் எடுத்துக் காட்டுங்கள். நீங்கள் திருப்பலியில் உங்களுக்கான சக்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள், எனது மகன் அவரது உடலால் ஊட்டம் தருவதுடன் இரத்தத்தால் சக்தியைத் தருகிறார். எனது பிள்ளைகளே, உங்கள் கைகளைக் குவித்து அமைதியாகத் திருச்சிலுவையைப் பாருங்கள். இதன் வழியாகவே உங்கள் நம்பிக்கையை வளர்ப்பதுடன் அதை பிறருக்கு வழங்க முடியும், உண்மைக்குச் சாட்சி பகருங்கள், இதன் மூலமே உண்மையாக அன்பு செய்வதற்கான வித்தியாசத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம், எனது பிள்ளைகளே, அன்பின் தூதர்களே, உங்கள் கைகளைக் குவியுங்கள், திருச்சிலுவையைப் பாருங்கள், சிலுவையே மீட்பைத் தரும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.