நேரலையில் தூய ஆவி திருவிழிப்புஆராதனைப்பெருவிழா - 2021
பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் 22-05-2021(சனிக்கிழமை) அன்று முழு இரவு நேரலை ஆராதனைப்பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.இவ் முழு இரவு ஆராதனைப்பெருவிழா இரவு 19.00 மணி முதல் மறு நாள் காலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது. அதிகாலை 05:30 மணிக்கு ஞாயிற்றுக்கிழமைக்குரிய திருப்பலியும் நேரலையில் இடம்பெறும்.