News Image

நமது பணியகத்தின் மூத்த பணியாளர் திரு. ஸ்ரனிஸ்லாஸ் யோனாஸ் அவர்கள் காலமானார்

நமது பணியகத்தின் மூத்த பணியாளரும் பணியக அருட்பணிப் பேரவையின் உறுப்பினருமான திரு.ஸ்ரனிஸ்லாஸ் யோனாஸ் அவர்கள் 31-05-2021 அன்று தனது 50 ஆம் வயதில் விண்ணக வாழ்வுக்கு ஆண்டவர் இயேசுவினால் அழைக்கப்பட்டு விட்டார், என்று செய்தியை உங்களுக்கு மிகுந்த வேதனையுடன் அறியத்தருகின்றோம். திரு.ஸ்ரனிஸ்லாஸ் யோனாஸ் அவர்கள் பிராங்க்போர்ட் பணித்தளத்திலும் பணியகத்தின் பல பணிகளில் தன்னை இணைத்து நீண்டகாலமாக ஆண்டவர் இயேசுவின் நற்செய்திப்பணியில் பணியாற்றியவரார். குறிப்பாக நமது பணியகத்தினால் நடாத்தப்பட்டு வரும் வானொலியில் நாளந்தம் இன்றைய புனிதர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய அடுத்தது