News Image

கேவலாரப் பாதை மாற்ற அறிவித்த்தல்




இவ்வாண்டு கேவலார் நகர முதல்வரால் முக்கிய அறிவித்தல் ஒன்று
தரப்பட்டுள்ளது. அதில் கேவலாரை அண்டிய பகுதியில் பாதை சீர்திருத்தப்பணிகள் நடை பெறுவதன் காரணமாக ஒரு
சில மாற்றுப் பாதைகளைப் பாவிப்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளார்.
அதன் படி, நெதர்லாந்தில் இருந்து வரும் பயணிகள் வழமை
போலவே, A57 நெடுஞ்சாலை வழியாக
வந்து Goch/Weeze வெளிச் செல்லும்
பாதை வழியே கேவலாரை அடையலாம்.



ஆனால், கேள்ன் மாநகரத் திசையில்
இருந்து வரும் பயணிகள்
வழமை
போலவே Sonbeck வெளிச்செல்லும்
பாதை எடுத்து, Winnekendonk திசையில் செல்ல வேண்டும். ஆனால், கேவலாரை நோக்கிச் செல்லும் Rhein Strasse
பாதை சீர்திருத்தப் பணியின் காரணமாக
முழுமையாக மூடப்பட்டிருக்கும். எனவே,
அங்கிருந்து மாற்றுப் பாதை வழியாகக் கேவலாரைச் சென்றடைவதற்கு நகர
காவலர்களது வழிகாட்டுதலுடன் Wetten
சென்று, அங்கிருந்து B9 சாலை வழியாக Gelden திசையில் சென்று கேவலாரை அடையலாம்.




நீங்கள் கேவலாரை அண்மித்ததும் திருவிழாப் பணியாளர்களதும், நகர காவலர்களினதும் உதவியுடன வழமையான நீச்சல் தடாகத்த்திற்கு அண்மையிலுள்ள வாகனத் தரிப்ப்பிடத்த்தில் உங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு ஆலயத்தைச் சென்றடையலாம்.


முந்தைய அடுத்தது