திருகோணமலை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்பணி நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன்
இலங்கையின் திருகோணமலை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்பணி நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 03.06.2015 அன்று நியமித்துள்ளார். திருகோணமலை ஆயராகப் பணியாற்றிவந்த ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள் பணி ஓய்வுபெற விரும்பி அனுப்பியிருந்த விண்ணப்பத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு புதிய ஆயராக 55 வயதான அருள்பணி நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் அவர்களை நியமித்துள்ளார்.புதிய ஆயர் அருள்பணி நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் அவர்களை யேர்மன் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகமும் செபத்துடன் வாழ்த்தி வரவேற்கின்றது.