News

உக்ரைனுக்காக செபித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை

பிப்ரவரி 9, புதைக்கிழமையன்று, தான் வழங்கிய மறைக்கல்வி உரைக்குப் பின்பு, கடந்த ஜனவரி 26 அன்று, உக்ரைனில் அமைதிக்காக இறைவேண்டலில் இணைந்து செபித்த அனைத்து மக்களுக்கும் சமூகங்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பதட்டங்கள், மற்றும் போர் அச்சுறுத்தல்களைத் தீவிரமான உரையாடல் மூலம் கடக்க வேண்டும் என்றும், “Normandy Format” என்ற அமைதி பேச்சுக்கள் இதற்குப் பயனளிக்கக் கூடும் என்றும், இதற்காக அமைதியை அருளும் கடவுளிடம் தொடர்ந்து மன்றாடுவோம் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் என்பது ஒரு மூடத்தனம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் எச்சரித்தார்.

வரும் பிப்ரவரி 11ம் தேதி வெள்ளிக்கிழமையன்று, ‘உலக நோயாளர்கள் தினம்’ என்றும், நோய்வாய்ப்பட்டிருக்கும் அன்பான மக்களை தான் நினைவுகூர விரும்புவதாகவும், அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக துணையுடன் உத்தரவாதம் கிடைக்கும் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், நோயாளர்களான நம்முடைய சகோதரர் சகோதரிகளுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும், சுகாதார மற்றும் மேய்ப்புப் பணியாளர்களுக்காகவும், அவர்களைப் பராமரிக்கும் அனைவருக்காகவும் இணைந்து இறைவேண்டல் செய்வோம் என்றும் கேட்டுக்கொண்டார்.

முந்தைய அடுத்தது