புலம்பெயர்ந்தோர்மீதான தாக்குதல் குறித்த இரங்கல் செய்தி
Congo ஜனநாயகக் குடியரசின் தென் பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள்மீது நடத்தப்பட்டக் கொடூரத் தாக்குதல்கள் மற்றும் மரணங்கள் குறித்துத் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை.
Congo நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடையே நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அந்நாட்டு அரசுத்தலைவர் Felix Tshisekedi அவர்களுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், இறந்தவர்களுக்கான திருத்தந்தையின் உறுதியும், உறவுகளை இழந்து தவிப்போருக்கு ஆறுதலுக்கான உறுதியும் வழங்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் காயம்பட்டுள்ள மக்களுக்குக் குணப்படுத்தலையும், ஆறுதலையும் வழங்க இறைவனைநோக்கி வேண்டுவதோடு, அனைவரோடும் திருத்தந்தை தன் ஆன்மிக நெருக்கத்தையும் ஆழமான அனுதாபத்தையும் வெளியிடுவதாகவும் அத்தந்தி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Congo குடியரசின் கிழக்குப் பகுதியிலுள்ள Ituri மாவட்டத்தின் Plaine Savo Djuga என்ற இடத்திலுள்ள புலம்பெயர்ந்தோர் குடியிருப்புகளில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நடத்திய தாக்குதலில், 12க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 60 பேர் உயிரிழந்துள்ளனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Congo குடியரசில் 56 இலட்சம் பேர் புலம்பெயர்ந்தவர்களாக வாழ்கின்றனர். இவர்களிடையே ஐ.நா. அமைப்புகளும், கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் நிறுவனமும் சேவையாற்றி வருகின்றன.