News

Quito வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி

கடந்த ஜனவரி 31ம் தேதி Quitoவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 27க்கும் மேற்பட்டோருக்கு இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இறந்தவர்களின் இளைப்பாறுதலுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலளிக்கவும் இறைவேண்டல் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

"இந்த அன்பான தேசத்தைத் தாக்கி, உயிழப்புகளை ஏற்படுத்தியதுடன், பலரைப் பாதிப்புள்ளாக்கி பொருள் சேதங்களையும் ஏற்படுத்திய இயற்கை பேரழிவுகளைப் பற்றி அறிந்து தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இறந்தவர்களின் ஆன்ம இளைப்பற்றிக்காக வேண்டுவதாகவும் திருப்பீடச் செயலர், கர்தினால் Pietro Parolin அவர்கள், Quito பேராயர் Alfredo José Espinoza Mateus, sdb அவர்களுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில் கூறியுள்ளார்.

அதேபோன்று, இந்த வலி, மற்றும் நிச்சயமற்ற நிலையில் தவிக்கும் உறவினர்கள், மற்றும் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கவும், காணாமல் போனவர்களைத் தேடும் கடினமான பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இறைவன் தன் அருளால் நிரப்பவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும், தான் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகவும் தந்திச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதாக கர்தினால் Pietro Parolin தெரிவித்துள்ளார்.

முந்தைய அடுத்தது