2020-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
அன்பான பிள்ளைகளே! இந்த அமைதியற்ற காலத்தில், சாத்தான் ஆன்மாக்களை தன்பக்கம் இழுப்பதற்கு மும்முரமாக முனையும் வேளையில், நீங்கள் செபத்தில் ஆழமாக இருக்குமாறும் இறைவனின் அன்பு மற்றும் நம்பிக்கையை கண்டுகொள்ளுமாறும் நான் உங்களை அழைக்கிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, சிலுவையைக் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் அன்பு நிறைந்த உற்சாகம் எப்பொழுதும் வெற்றிபெறும், விசேடமாக சிலுவை மற்றும் நம்பிக்கை நிராகரிக்கப்படும் இந்த வேளையில். நீங்கள் உங்கள் வாழ்க்கை மூலம் மற்றவர்களுக்குப் பிரதிபலிப்பாக இருப்பதுடன், விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் தற்போதும் உயிரோட்டமாக இருந்து காட்டுவதன் மூலம் ஒரு புதிய அமைதியான உலகிற்கு வழிசமையுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக எனது மகன் இயேசுவிடம் பரிந்து பேசுகின்றேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றிகூறுகின்றேன்!.