News Image

2020-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இது இரக்கத்தின் காலம். நான் உங்களுடன் இருப்பதுடன் நான் உங்களை மீண்டும் புதிதாக அழைக்கிறேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபங்கள் உங்களுக்கு மகிழ்வைத்தரும் வரை கடவுளிடமும் செபத்திற்கும் திரும்பி வாருங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் வாழ்வில் நீங்கள் தனிப்பட்ட முறையில் மனம் திரும்புவதுடன் மாற்றங்கள் நன்மைகளைத் தரும்வரை நல்ல எதிர்காலமோ அல்லது அமைதியோ கிடைக்காது. தீயவை முடிவுக்கு வரட்டும் சமாதானம் உங்கள் இதயத்திலும் உலகத்திலும் நிரம்பட்டும். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள்! நான் உங்களுடன் இருப்பதுடன் நான் எனது மகன் இயேசுவிடம் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் பரிந்துரைப்பேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன்!“

முந்தைய அடுத்தது