News

2024-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று உங்களுடனான எனது செபம் சமாதானத்திற்காக
அமைகின்றது. நன்மையும் தீமையும் சண்டையிட்டு உலகிலும் மக்கள் இதயங்களிலும்
வெற்றிபெற விரும்புகின்றன. நம்பிக்கையின் மற்றும் செபங்களின் மக்களாகவும்
படைப்பாளரான இறைவனில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருங்கள், அன்பான
பிள்ளைகளே, உங்களிடமும், உங்களைச் சுற்றிலும் சமாதானம் நிலவட்டும். நான்
உங்களுக்கு அன்னையாகிய எனது ஆசீரை வழங்குகின்றேன், அதன்மூலம் எனது
அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் சந்திக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியைப் பரப்புங்கள். எனது
அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகின்றேன்.

முந்தைய அடுத்தது