அன்பான பிள்ளைகளே, எனது பிள்ளைகளே, எனது அன்பார்ந்தவர்களே! நீங்கள் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் ஏனென்றால் நீங்கள் எனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அவற்றை உகந்த விதத்தில் நடைமுறைப்படுத்தி உங்கள் கடவுளின் பாதையில் அனைத்தையும் விரும்புபவர்களாக உள்ளீர்கள். ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, உங்கள் இதயத்தால் செபியுங்கள், இதன்மூலம் எனது வார்த்தைகள் உண்மையாக நிகழும். உங்களைப் படைத்த இறைவனிடம் மன்றாடி ஒறுத்தல்களை மேற்கொள்ளுங்கள், தானம் செய்யுங்கள், எனது அன்பான பிள்ளைகளே, இறைவனின் அன்பை இதுவரை அனுபவத்திராவர்களுக்காக இவ்வுலகத்தில் நான் கைகளை அகலத்திறந்துள்ளேன். எனது குரலைக் கேட்பதற்காக நான் நன்றி கூறுகின்றேன். (ஆலய அனுமதியுடன்)
September 1, 2025
2025