2024-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! நான் உங்களுடன் இருந்து, உங்களை நேசிப்பதுடன், செபிப்பதில் ஊக்குவிக்கிறேன் என நான் உங்களுக்குக் கூறுகிறேன், சாத்தான் வலிமையானவன், ஒவ்வொரு நாளும் மரணத்தையும் வெறுப்பையும் தேர்ந்தெடுத்தவர்கள் மூலம் அவனுடைய சக்தி வலுவடைகின்றது. எனது அன்பான பிள்ளைகளே, இருளில் இருந்து கடவுளின் ஒளியைத் தேடும் அனைவருக்குமாகச் செபியுங்கள், எனது அகல விரித்த கரங்களின் பாதுகாவல் உங்கள் அனைவரோடும் இருக்கும். எனது அழைப்பைக் கேட்பதற்கு எனது நன்றிகள்“