2023-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில் நான் உங்களை இதயத்தால் செபிக்க அழைக்கிறேன். உங்கள் இதயத்தை நேசியுங்கள், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் செபம் வானத்தைத் துளைத்துச் செல்லட்டும், அதன்மூலம் உங்கள் இதயம் கடவுளின் அன்பை அனுபவிக்கட்டும், அவர் உங்களைக் குணப்படுத்துவதுடன் தனது அளவிடமுடியாத அன்பால் உங்களை ஆட்கொள்வார். ஆகவேதான் நீங்கள் இதயத்தால் மனம்திரும்பும் வழிகளைக்காட்ட, நான் உங்களுடன் உள்ளேன். எனது அழைப்பைக் கேட்பதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“