2023-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில், எல்லாம்வல்ல இறைவன் என்னை உங்களை அன்புசெய்ய மற்றும் மனமாற்றத்திற்கான வழியில் நடத்த மற்றும் அன்பான இறைவனை இதுவரை அறியாமல் தூரத்தில் விலகி இருக்கும் அனைவருக்காக செபிக்கவும் அவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்கவும் உங்களிடம் அனுப்பியுள்ளார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அனைத்து அமைதியற்ற இதயங்களுக்கு, அன்பு மற்றும் சமாதானத்தின் சாட்சிகளாக இருங்கள். எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி“