2023-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! என்னுடன் சேர்ந்து சமாதானத்துக்காக செபியுங்கள், ஏனென்றால் இதயங்களுக்குள்ளும் இனங்களுக்குள்ளும் சாத்தான் போரையும் வெறுப்பையும் விரும்புகின்றான். ஆகவே செபியுங்கள், உங்கள் நாட்களை நோன்பிலும் தவத்திலும் செலவிடுங்கள், இதன்மூலம் இறைவன் உங்களுக்கு சமாதானத்தைத் தருவார். எதிர்காலம் குறுக்கு வழியாக உள்ளது, ஏனென்றால் நவீனகால மனிதனுக்கு இறைவன் தேவையில்லை. ஆகவே மனித இனம் அழிவுப் பாதைக்குச் செல்கின்றது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்களே எனது நம்பிக்கை. என்னுடன் சேர்ந்து செபியுங்கள், அதன்மூலம் நான் பற்றிமாவில் மற்றும் இங்கு ஆரம்பித்த செயற்பாடுகள் நிஜமாகட்டும். செபிப்பதுடன் உங்கள் சூழலில் சமாதானத்துக்கு சாட்சிகளாக வாழுங்கள். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகின்றேன்.“