News

2022-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! அனைத்திலும் உயர்ந்தவர் உங்களுக்கு செபிக்கக்
கற்றுக்கொடுக்குமாறு என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார். செபங்கள் இதயத்தைத்
திறப்பதுடன் நம்பிக்கையைத் தந்து, விசுவாசத்தைப் பிறப்பித்து உறுதியாக்குகின்றது.
எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களை அன்பாய் அழைக்கிறேன்,
இறைவனிடம் திரும்பி வாருங்கள், இறைவன் அன்பானவர் மற்றும் அவரே உங்கள் நம்பிக்கை. நீங்கள் இறைவனிடம் தஞ்சமடையாவிட்டால் உங்களுக்கு எதிர்காலம் அற்றுப்போய்விடும், ஆகவேதான் நான் உங்களை வழிநடத்துவதற்காக உங்களிடம் வந்துள்ளேன், இதன்மூலம் நீங்கள் மனம்திரும்பி இறப்பை விடுத்து வாழ்வை முடிவுசெய்யுங்கள். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகின்றேன்.„

முந்தைய அடுத்தது