News

2023-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நீங்கள் மனந்திரும்புங்கள் அத்துடன் நீங்கள் அதற்கான ஆடைகளை அணிந்து சமாதானத்துக்காக ஆழமான தனிப்பட்ட செபங்களை தாழ்பணிந்து அனைத்திலும் வல்லவரான இறைவனிடம் சமர்ப்பியுங்கள். இந்த மன்னிப்பின் காலத்தில் சாத்தான் உங்களை சோதிக்கும், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது மகனைப் பார்ப்பதுடன் அவரைப் பின்தொடர்ந்து கல்வாரி மலைவரை நோன்பிருந்து செபியுங்கள். நான் உங்களுடன் உள்ளேன், ஏனென்றால் அனைத்திலும் வல்லவரான இறைவன் என்னை உங்களை அன்பு செய்யவும், உங்கள் இதயங்களை மகிழ்வால் நிரப்பவும் அனுமதித்துள்ளார், அத்துடன் நம்பிக்கை அனைவரிலும் வளர்வதுடன், அனைத்திலும் பார்க்க இறைவனை அன்புசெய்யுங்கள். எனது குரலைக் கேட்பதற்கு நன்றி கூறுகின்றேன்“

முந்தைய அடுத்தது