2022-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
அன்பான பிள்ளைகளே! நான் உங்களைப் பார்ப்பதுடன் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன், ஏனென்றால் அவர் தொடர்ந்தும் என்னை உங்களிடம் வந்து, உங்களைத் தூயவர்களாக வாழத் தூண்ட, என்னை அனுமதித்துள்ளார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, சமாதானம் குழம்பியுள்ளதுடன் சாத்தான் அமைதியின்மையை விரும்புகிறது. ஆகவே உங்கள் செபங்கள் மேலும் பலமடையட்டும், அதன்மூலம் ஒவ்வொரு தீய சக்தியும் பிரிவடைந்து போரில் அழிந்து போகட்டும். சமாதானத்தைக் கட்டுவிப்பவரும் மகிழ்வை ஏற்படுத்துபவருமான உயிர்த்த கிறிஸ்து உங்களிடமும் உங்கள் சூழலிலும் இருப்பாராக, அதன்மூலம் ஒவ்வொரு மனிதருக்கும் நன்மைகளுடனான வெற்றி கிடைக்கட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்கு உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.