2022-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
அன்பான பிள்ளைகளே! உங்களை நான் பார்க்கிறேன், அத்துடன் உங்களில் பலர் காணாமற்போயுள்ளதையும் காண்கின்றேன். ஆகவே உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்: கடவுளிடம் திரும்பி வாருங்கள், செபத்திற்குத் திரும்பி வாருங்கள், தூயஆவியானவர் தனது இதயத்தில் மகிழ்வடைந்து உங்களை தனது அன்பால் நிரப்புவார். ஒரு சிறப்பான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள், நீங்கள் கடவுளின் திருஇருதயத்திற்கு எங்கும் சாட்சிகளாய்த் திகழுங்கள். எனது அழைப்பைக் கேட்பதற்கு உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.