2022-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! சமாதானத்துக்கான உங்கள் தாழ்மையான வேண்டுதல்களையும் உங்கள் மன்றாட்டுக்களையும் நான் கேட்கின்றேன். இதனால்தான் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பி, உங்களைத் தூயவழியில் வழிநடத்தச் செய்கிறார், ஏனென்றால் மனிதகுலம் குறுக்கு வழியை நாடுகின்றது. நான் உங்களை இறைவனிடமும் அவரது கட்டளைகளிடமும் திரும்புமாறும், இதன்மூலம் நீங்கள் இப்பூமியில் செழித்து வளரவும், உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடவும் அழைக்கிறேன், ஏனென்றால் நீங்கள் உங்களை நேசிக்கவும் உங்களைக் காக்கவும் உங்களுக்குப் புதுவாழ்வைத் தர விரும்பும் இறைவனின் வார்த்தைகளைக் கேட்காமல் உள்ளீர்கள். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி.“