2022-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
அன்பான பிள்ளைகளே! நான் உங்களோடு இருக்கிறேன் அத்துடன் நாம் ஒன்றுசேர்ந்து செபிப்போம். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபத்தால் எனக்கு உதவுங்கள், அதன்மூலம் சாத்தான் முன்னுரிமை பெறாதிருக்கட்டும். அதனது இறப்பின் சக்தி, வெறுப்பு மற்றும் பயம் என்பவை உலகை வந்தடைந்துள்ளது. ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இறைவனிடமும் செபத்திடமும் திரும்பி வாருங்கள், அடிமட்டத்தில் உள்ளவர்கள், ஏழைகள், மற்றும் இறைவன் இல்லாது இவ்வுலகில் எவ்வித குரலும் இல்லாதிருப்பவர்களுக்காக ஒறுத்தல்கள் மற்றும் துறுத்தல்களை மேற்கொள்ளுங்கள். அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் இறைவனிடமும் அவர் கட்டளைகளிடமும் திரும்பி வராவிட்டால், உங்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை. ஆகவேதான் அவர் என்னை உங்களிடம் அனுப்பி உங்களை வழிநடத்துகின்றார். எனது குரலைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன்!