2021-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
அன்பான பிள்ளைகளே! செபத்துக்குத் திரும்புங்கள், ஏனென்றால், யார் செபிக்கின்றார்களோ, அவர்கள் தமது எதிர்காலம் குறித்துப் பயப்பட மாட்டார்கள். யார் செபிக்கின்றார்களோ, வாழ்க்கையில் திறந்த மனதுடன் இருப்பதுடன் பிறரின் வாழ்வில் கவனமெடுப்பார்கள். யார் செபிக்கின்றார்களோ, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அவர்கள் இறைவனின் சுதந்திரத்தை உணர்வதுடன் இதய மகிழ்வுடன் தமது சகோதர மனிர்களுக்குப் பணிபுரிவார்கள். ஏனென்றால் இறைவன் அன்பானவரும் சுதந்திரமானவரும். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எவராவது உங்களை சங்கிலியால் பிணைத்து அவர்களுக்கு பணிவிடைபுரிய வைத்தால் அது இறைவனிடமிருந்து வருவதல்ல, இறைவன் அன்பானவர் என்பதுடன் எந்தப் படைப்பிலும் அவரது அமைதி இருக்கும். ஆகவேதான் அவர் என்னை உங்களிடம் அனுப்பி, உங்களுக்கு உதவச் செய்கிறார் , தூயவர்கள் ஆவதற்கான வழியை வளரச் செய்கின்றார். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி!