News

2021-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே, செபியுங்கள், சாட்சியம் வழங்குவதுடன் என்னுடன் சேர்ந்து நீங்களும் மகிழுங்கள், ஏனென்றால் எல்லாம் வல்லவர் என்னைத் தொடர்ந்து அனுப்பி, உங்களை தூய வழியில் நடத்திச்செல்லுகிறார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் விழிப்பாயிருங்கள், வாழ்க்கை குறுகியது என்பதுடன் அனைத்துத் தூயவர்களுடன் இறைவன் சந்நிதானத்தில் மகிமையோடு முடிவிலா வாழ்வு உங்களுக்கு கிடைக்கவுள்ளது என்பதை மறவாதீர்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, பொய்மையான பொருட்களை நினைத்துக் கவலைப்படாதீர்கள், மாறாக வானகத்தை மனதில் கொள்ளுங்கள். வானகமே உங்கள் குறிக்கோளாக இருப்பதுடன் அந்த மகிழ்வு உங்கள் இதயத்தை நிரப்பட்டும். நான் என்றும் உங்களுடன் இருப்பதுடன் அன்னையாகிய எனது ஆசீரை உங்களுக்கு வழங்குகின்றேன். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகின்றேன்“

முந்தைய அடுத்தது