News

2021-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்கள் அனைவரையும் நான் மகிழ்வுடன் அழைக்கிறேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது அழைப்பைக் கேட்கும் உங்களுக்கு மகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாகட்டும்! நான் உங்களுக்கு எடுத்துவரும் ஆசீர்களுக்காக நீங்கள் வானகத்திற்கு சாட்சிகளாக வாழுங்கள். எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் எனது அன்பை அனைவருக்கும், அதாவது உங்களை அன்பு செய்யாதோருக்கும் தமது இதயத்தில் வெறுப்பைக் கொண்டிருப்போருக்கும் காட்ட இதுவே தருணம். மறவாதீர்கள்: நான் உங்களுடன் இருப்பதுடன், எனது மகன் இயேசுவிடம் உங்களுக்காக பரிந்துபேசுகின்றேன், இதன்மூலம் அவர் தனது சமாதானத்தை உங்களுக்கு வழங்குவார். நன்றி, நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு!

முந்தைய அடுத்தது