News

2021-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! செபிக்காத அனைவருக்காகவும் செபிக்குமாறு உங்களை நான் அழைக்கிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியால் சாட்சிகளாகத் திகழுங்கள், எனது பிள்ளைகளாக இருங்கள், இறைவன் உங்கள் செபங்களைக் கேட்டு உங்களுக்கு அமைதியைத் தரட்டும், இந்த அமைதியற்ற உலகில் அரவணைப்பும் ஆதரவும் வழங்கட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, மற்றவர்களுக்கு வாரி வழங்குங்கள், எனது அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இதன்மூலம் பிறர் நீங்கள் எனக்குச் சொந்தமானவர்கள் என்பதை உணர்ந்து கொள்வதுடன், எனது மாசற்ற இதயத்திற்கு மனம்மாறித் திரும்பட்டும். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்.

முந்தைய அடுத்தது