2021-05-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! நான் உங்களைப் பார்த்து அழைக்கிறேன், இறைவனிடம் திரும்பி வாருங்கள், ஏனென்றால் அவரே அன்பானவர் அத்துடன் அவரது அன்பின் நிமித்தம், மனம்திரும்பும் வழியில் உங்களை நடத்திச்செல்ல என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார். பாவத்தையும் தீயவற்றையும் விட்டுவிட்டு, தூயவற்றிற்காக உங்களை ஒப்படைத்தால் மகிழ்ச்சி உண்டாகும். மறைந்துபோகும் இவ்வுலகில் உங்களை எனது நீட்டிய கைகளுக்குள்ளே வைத்திருக்கிறேன். கடவுளின் அன்பை இதுவரை கண்டறியாதவர்களுக்காக செபிப்பதுடன் அவர்கள் குறித்து நம்பிக்கை கொள்ளுங்கள். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றிகூறுகிறேன்!“