News

2021-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி


அன்பான பிள்ளைகளே! உங்கள் நம்பிக்கையை வசந்தகாலத்தின் வர்ணங்களாகக் காட்டிக்கொள்ள இன்று உங்களை நான் அழைக்கிறேன். இது உங்கள் நம்பிக்கையில் உறுதியை மற்றும் உற்சாகத்தைத் தருவதாக அமையட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் நம்பிக்கையை அசைந்தாட அத்துடன் இந்த வேளையில் பரீட்சித்துப்பார்க்க விடாதீர்கள். துணிவோடு கிறிஸ்துவுடன் செல்லுங்கள், அவரே வானத்தை நோக்கி உயிர்த்தவர், அவரே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். இந்தத் தூய வழியிலேயே நான் உங்களை வழிநடத்துவதுடன் உங்கள் அனைவரையும் எனது கறையற்ற இதயத்தில் வைத்துள்ளேன். எனது அழைப்பைக் கேட்பதற்கு நான் நன்றி கூறுகிறேன்.

முந்தைய அடுத்தது