News

2021-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களோடு இருந்து உங்களுக்குக் கூறுகின்றேன்: எனது அன்பார்ந்த பிள்ளைகளே, யார் செபிக்கின்றார்களோ, அவர்கள் தமது எதிர்காலம் குறித்து பயப்படுவதில்லை என்பதுடன், அவர்கள் நம்பிக்கையை இழந்து விடமாட்டார்கள். நீங்கள் மகிழ்வையும் சமாதானத்தையும் எடுத்துச் செல்பவர்களாக அழைக்கப்பட்டுள்ளீர்கள், ஏனென்றால் நீங்கள் என்னுடையவர்கள். நான் சமாதானத்தின் இராக்கினி என்ற பெயரில் இங்கு வந்துள்ளேன், ஏனென்றால் சாத்தான் குழப்பங்களையும் போர்களையும் விரும்புகிறது, அது உங்கள் எதிர்காலம் குறித்து பயத்தை ஏற்படுத்த விரும்புகிறது, ஆனால் எதிர்காலம் இறைவனுடையது! ஆகவே துணிவுடன் செபியுங்கள், அத்துடன் அனைத்தையும் உங்களைப் படைத்த எல்லாம் வல்ல இறைவனின் கைகளில் ஒப்படையுங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்!

முந்தைய அடுத்தது