2021-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! உங்களை செபத்திலும் நோன்பிலும் வாழ அழைக்குமாறு இறைவன் இன்றும் எனக்கு அனுமதி தந்துள்ளார். இரக்கம் மற்றும் நம்பிக்கைக்குச் சாட்சியமாக இருக்கும் இக்காலத்தில் வாழ்கின்றீர்கள், ஆகவே நான் மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபமும் நோன்பும் போர்முழக்கங்களையும் அடங்கச்செய்துவிடும். அன்பான பிள்ளைகளே, இந்த இரக்கத்துக்குரிய காலத்தை நம்புவதுடன், விசுவாசத்துடன் வாழுங்கள், எனது மாசற்ற இதயம் என்னில் அபயம் தேடும் உங்களில் எவரையும் கைவிட்டுவிடாது. எல்லாம் வல்ல இறைவனிடம் நான் உங்கள் அனைவருக்காகவும் உங்கள் இதயத்தில் அமைதி குடிகொள்ளவும் எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்ளவும் பரிந்துபேசுவேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்“.