News

2021-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! நான் உங்களை இந்த வேளையில் செபிக்க, நோன்பிருக்க மற்றும் ஆடம்பரங்களைத் தவிர்த்துக்கொள்ள அழைக்கிறேன், இதன்மூலம் நீங்கள் மேலும் விசுவாசத்தில் உறுதியாகலாம். இதுவே விழித்துக்கொள்ள மற்றும் புதிய பிறப்பெடுப்பதற்கான தருணம். இயற்கை தானே வழங்குவது போன்று, நீங்களும், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எவ்வளவற்றைப் பெற்றுள்ளீர்கள். சமாதானம் மற்றும் அன்பை காவிச்செல்பவர்களாக இருங்கள், இதன்மூலம் நீங்கள் உலகில் பல நன்மைகளைப் பெற்றுக்கொள்வீர்கள். வானத்தைப் பாருங்கள், அங்கு கவலையோ அல்லது வெறுப்போ இருப்பதில்லை. ஆகவே எனது அன்பார்ந்த பிள்ளைகளே, மனம்திரும்பி புதிய முடிகளை எடுப்பதுடன் தூய்மை உங்கள் வாழ்வை ஆட்கொள்ளட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.”

முந்தைய அடுத்தது